வான மழை நீயெனக்கு

கவிதை

வான மழை நீயெனக்கு...

என் மடியில் விழுந்து
மனதில் புகுந்தாய்
நீ நழுவிச் செல்லாமல்
என் உயிரில் கலந்து
உணர்வில் கலந்தாய் !

எனக்கு நீ என்றும்
உனக்கு நான் என்றும்
காதல் மொழிகளை
காற்றில் பறக்க விடாமல்
என் இதயம் கலந்தாய் !

கடல் அலையின் மீது
துளி நீர் விழுந்தாலும்
கடல் அலையோ கலங்காது
உன் கயல் விழியிலிருந்து
துளி நீர் விழுந்தாலும்
என் நெஞ்சம துடிக்கிறதே !

நீ எனக்கு வரைந்த
காதல் கடிதங்களை
ஒன்று சேர்த்தால்
காதல் கோட்டையே கட்டி
அழகு பார்க்கலாமே !

லைலா மஜுனு
காதல் அமரகாவியம்
அம்பிகாவதி அமராவதி
காதல் கல்லறை ஓவியம்
நம் காதல் உயிரோவியம் !

நிழலுக்கு என்னவாயிற்று
என் மீது என்ன பிரியம்
விடாமல் துரத்துகிறது
உன் நினைவுகளைப் போல்
என்னைத் துரத்துகின்றன

என்னவளே உன்னை
மணந்து கொள்வதே
என் உயிர்த் துடிப்பு
இன்னும் என் கையில்
வான வில்லை வளைத்து
மாலையாக வைத்திருக்கிறேன்
வான மழை நீயெனக்கு!

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (30-Dec-16, 8:13 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 96

மேலே