பூமியின் பார்வையில் 2017

பூமியின் பார்வையில் 2017..!
எத்தனையோ பார்த்துவிட்டேன்..,
எதையெதையோ பார்த்துவிட்டேன்..,
சுட்டெரிக்கும் "மாக்மாவை"யும் பார்த்துவிட்டேன்..,
சுருண்டு விழும் பணிப்பந்தையும் பார்த்துவிட்டேன்..,
லெமூரியா கண்டத்தை கண்டறிந்தேன்..,
டைனோசர் காலத்தை கடந்துவிட்டேன்..,
நெருப்பை கொண்ட மனிதனை கண்டறிந்தேன்..,
நெருங்காமல் அவரையே பின்தொடர்ந்தேன்..,
அமுதினும் இனிதாய் மொழியை செவிமடுத்தேன்..,
அதர்க்கு அழகு"தமிழ்" என்றே பெயர் கேட்டேன்..,
ஆழிப்பேரலை அங்கொன்றும் இங்கொன்றுமாக அலையக் கண்டேன்..,
அதில் நற்சங்கம் வளர்த்த தமிழ்..,
தவிப்பதை கண்டேன்..,
எத்தனை வெற்றி..
எத்தனை தோல்வி..
எத்தனை போர்கள்..
எத்தனை வீரமரணம்..
எத்தனை துரோகம்...
எத்தனை வஞ்சினம்..
எல்லாம் கண்டேன்...
அரசனும் ஆண்டியானான்..!
ஆண்டியும் அரசரானார்..!
இதர்கு மேலும் கண்டேன் ..,
காண்கிறேன்..!
மக்களுக்காக அரசன் என்ற நிலை மாறி..
அரசனுக்காகவே அரசன் என்ற
நிலையை உணர்ந்தேன்..
பணம் படைத்தவனையும் பார்த்தேன்..,-அது
படுத்தும் பாட்டையும் பார்த்தேன்..!
எங்கும் பார்கிறேன்..!
மனிதனை மனிதன் அடிமை படுத்துவதை...!
உலக நாடுகள் முதல்..,
உள்ளூர் திண்னை வரை..
இத்தனையும் பார்த்துவிட்டேன்- இந்த
21-ஆம் நூற்றாண்டின் 16 வயதினிலே...!
என் புது வயதில் நான் பார்க்க
இனி இந்த விதி எனக்கு எத்தகைய ஆச்சரியங்களை ஒழித்து வைத்துள்ளது..
பார்க்கிறேன் உங்களோடு சேர்ந்து...!
-இப்படிக்கு
அதிக வெப்பத்துடன் பூமி..!