காலங்களுடன் கடிகாரம் உடன் ஓட
அன்பை கொடு அதிகாரம் செய்யாதே
ஆர்வமாய் செயல்படு அழிக்க நினைக்காதே
இனிமையாய் பேசு இச்சகம் பேசாதே
ஈரமான மனம்கொள் இழிவாய் செயல்படாதே
உண்மையாய் நேசி உடைதெறியாதே
ஊசிப்போலாகு உருவாக்க, உருவக்குத்த அல்ல
எண்ணம் உறுதிக்கொள்
ஏற்றம் தானே வரும் - மகிழ்ச்சி
ஒவ்வொன்றாய் மலர்ந்தெழும்
ஓடும் நீரோடையானால் ஓங்கும் பெலன் தீமையை உடைத்தெறியும்
ஔவை சொன்ன வார்த்தையல்ல
அஃதொரு நல்ல மனம் விரும்பியின் வரிகள் !!!
இனிய புதிய வருடத்தை
இனிமையான நல்மனதோடு வரவேற்ப்போம் !!!