விதை விருட்சமாகும்

இன்றே விதைப்போடு நாளை விருட்சமாகும்
நன்றே விதைப்போடு நாடே வளம்பெறும்
நல்குணத்தை விதைப்போடு காலம் புகழ்ப்பாடும்

விதைப்போடு விருட்சமாகும் வரை
நடைப்போடு இலக்கை அடையும்வரை
கரம்கொடு பிறர் உயர்ந்தெலும்பும் வரை

அன்பிற்கு மனம் கொடு
அழுகைக்கு ஆறுதல் கொடு
அன்னைக்கு அனைத்தும் கொடு
அரணுக்கு அணைப்பை கொடு
அகிலத்திற்கு உழைப்பை கொடு
விழுபவனுக்கு தோல்கொடு
எழுபவனுக்கு கரம்கொடு
தோழனுக்கு உறவை கொடு
எதிரிக்கு மன்னிப்பை கொடு

கொடு கொடுப்பவன் என்றும் விழ்ந்துபோவதில்லை
கெடுப்பவன் என்று உயர்ந்து பறப்பதில்லை !!!

எழுதியவர் : ச.அருள் (1-Jan-17, 4:30 am)
பார்வை : 364

மேலே