புதியதொரு ஆண்டு புண்ணியம் செய்திட
மகிழ்ச்சியோடு வாழ
மனதை தூய்மையாக்குவோம்,
களிப்போடு வாழ
கண்பார்வைதனை நேராக்குவோம்,
சிறப்போடு வாழ
செவிகளை நன்மை மட்டும் கேட்க்க செய்வோம்,
நலமுடன் வாழ
நாவை நல்லவைக்கு மட்டும் பயன்படுத்துவோம்,
அமைதலோடு வாழ
ஆன்மாவை பரிசுத்தமாக்குவோம்,
மனநிறைவோடு வாழ
மனதில் அன்பை விதைத்திடுவோம் ,
பண்போடு வாழ
பகிர்வோம் உள்ளத்தை,
பணிவோடு வாழ
பதிப்போம் நல்விதைதனை !!!