அதிகாலை
சாம சேவல் கூவி எனக்கு, சமிக்ஞை தந்தது.....
அதிகாலை வருவதை முன் நினைத்திட...
அதிகாலை நான் ஏழ,கடிகார ஒலியும் வேண்டாம்....
கரிச்சானின் ஒலியே போதும்,நான் இங்கே ஏழுந்திரிக்க. ...
அதிகாலை பசியிலிருக்கும், பறவைகளின் ஓலியே போதும்,
நானும் இங்கே கண்விழிக்க...
நடுச்சாமம் கூவிய சேவல்,அதிகாலை மறந்து போச்சோ...
காக்கைகள் என்னை எழுப்பமிங்கே...
மொட்டுகள் மீதமர்ந்த,பனி துளி பூவை திறக்க சொல்லும்.....
கதிரே, என் திறவுகோல் என்று...
பனியை கொஞ்சம் பொறுக்க சொல்லும்....
பஞ்சாரத்தில் நானடைத்த , குஞ்சு கோழி
திறக்க சொல்லும்...
மடிநிறைந்த பால் குடிக்க...
கன்று குட்டி அவிழ்க சொல்லும்....
என் ஆட்டு குட்டி முறுக்கு விடும். ..
அழகை ரசிக்க கண்கள் தேடும்...
என் காளை நாவல், வருடும் போது...
என் சொம்பல் போகும்...
என் மன ஏட்டில், வருகை பதிவெடுத்து...
இந்நாள் தொடங்கும்...