விழியாலே பாய்விரித்து

விழியாலே பாய்விரித்து உன் நெஞ்சினிலே நானுறங்க
நினைவாலே கோலமிட்டு கனவினிலே நீ கிறங்க
விரலாலே ஜாலமிட்டு உன் மேனியிலே நீந்துகையில்
கனியிரண்டும் காதலோடு கள்ளனிடம் துள்ளுதடி
மகரத தேரினிலே மலர் பந்தல் காத்திருக்க
மலர்மஞ்ச மேடையிலே மங்கையவள் பூத்திருக்க
கருப்பழகு தேவனவன் மேனியிலே கீதமிசைக்க
சிவப்பழகு தேவியவள் சிங்கார ராகமிசைக்க
தேடிவந்து பாயுதடி
நாடி நரம்பில் கோடி மின்னல்