அனாதை
கோடி கோடி உயிரணுவில்
உன் கருவறையை நாடிவந்தும்
பத்துமாதம் பொறுத்துவிட்டாய்
போதுமென்றன் ஆட்டமென்று
குப்பையதில் வீசிவிட்டாய்
என்னை புதைத்திடவா பத்துமாதம் சுமந்திருந்தாய்
உன் முகத்தை மறைத்திடவா
குப்பையிலே வீசிவிட்டாய்
நான் காட்டுப்பூ என்றெனவே
காட்டோடு வாழவிட்டாய்