தொடரும் காதல்

உங்கள் நண்பன் பிரகாஷின்
112ம் படைப்பு.......

நினைவே....
என் நினைவே....
தினமும் உன்னை நினைக்கிறேன்....

கனவில்....
நான் காணும் கனவில்...
உன்னை காண துடிக்கிறேன்....

மனசு முழுவதும்
உன்னை வைக்கிறேன்...
உன்னை கண்டபொழுது தானே
என்னை மறக்கிறேன்....
கவிதை கோடி
நான் எழுதி வைக்கிறேன்....
அதை உன்னிடம் கொடுக்க
ஏனோ மறுக்கிறேன்.....

சிறகடிக்கும் சிட்டு கிட்ட
தலை ஆட்டும் பொம்மை ஆனேன்....
அழகுள்ள பொண்ணு கிட்ட
காதலுக்கு அடிமை ஆனேன்.....
( 2 )

(நினைவே)

அடியே...
என் தூங்கும் விழிகளும்
தூங்க மறுக்குது.....
காணும் கனவிலும்
உன் முகமாய் தெரியுது....

பகல் கனவுகளை
என் நெஞ்சமும் காணுது....
கன்னி மனசில்
காதல் வேலைய காட்டுது....

மழலை சிரிப்பு தான்
மயக்கி போகுது....
உன் கண்கள் என்னை ஏன்
கடத்தி போகுது.....

அழகு நிலாவும்
தோற்றுப் போகுது....
கள்ள விழிகள்
என்னை கொன்று போகுது....

அடியே!
உன் கன்னாங்குழியில
விழிந்து கிடக்கிறேன்...
காதல் என்னும் சிறையில்
இப்ப மாட்டி தவிக்கிறேன்....

அடியே!
ஒரு முறை காதல சொல்லு....
இந்த பூமிய நான் உனக்கு
விலைக்கு வாங்கி தருகிறேன்...

அட அட அடடா.....!
ஒரு தலைக்காதல் ரொம்ப
அழகு....! அழகு.....!

எழுதியவர் : பிரகாஷ்.வ (2-Jan-17, 8:56 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : thodarum kaadhal
பார்வை : 268

மேலே