சொர்க்கமே என்றாலும்

சொர்க்கமே என்றாலும்
நம்மூரு நம்மூரு தான்
எவரென்னச் சொன்னாலும்
சுகம்கொடுப்பது நம்மண்ணு தான்
எங்கெங்குச் சென்றாலும்
ஊர் வாசம் நமையிழுக்கும்
உறவை விட்டுச்சென்றாலும்
நினைவு முழுதும் அதுஇருக்கும்
பொன்னான நேரங்களில்
அதன் புன்னகை ஞாபகம்வரும்
துன்பப்படும் நேரங்களில்
அதன் ஆறுதலை மனம்தேடும்
பழகிய மொழியும்
நம்மைப் பழக்கிய வழியும்
விலகியே செல்லாது
நம் உள்ளத்துள் நிதமிருக்கும்
சொர்க்கத்தைக் கண்டதில்லை
நம்மூரை மட்டும் தெரியும்
சுகம்மட்டும் தரும்
நம்மூரின் சுகந்தம் மயக்கும்