சின்ன சின்ன ஆசையடி

சின்ன சின்ன ஆசையடி தொடுவானம் தூரமில்லை தொட்டு தூக்க ஆசையடி

கயல்மேல பாய்விரித்து பனிபாறை மெத்தையிலே படுத்துறங்க ஆசையடி

வானலில்லிலக ஊஞ்சல் கட்டி
வானமங்கை துணையை கூட்டி ஆடிவிட ஆசையடி

வானில் மிதக்கும் மேகமதை பஞ்சுமிட்டாய் ஆக்கிவைச்சு
சுவைத்திடவே ஆசையடி

நீலவான மேனியிலே நீந்துகின்ற வெண்ணிலவை
பொட்டு வைக்க ஆசையடி

பொங்கிவரும் வெள்ளமதை
கையாலே அள்ளி அள்ளி பருகிவிட ஆசையடி

இறங்கிவரும் மழைதுளியை
முத்துமாலை ஆக்கிவிட்டு
கழுத்தில் போட ஆசையடி

தென்றலவன் தீண்டுகையில்
தென்றலவன் மேனியதை கட்டிதழுவ ஆசையடி

இமயமலை பனியை எல்லாம் மாலையாக்கி நெஞ்சில் போட ஆசை ஆசை ஆசையடி

பணமென்னும் காகிதமதை
பூவா கட்டி தலையில் வைக்க
ஆசை ஆசை ஆசையடி

இன்னும் இன்னும்
ஆசையடி இல்லாத பேராசையடி

எழுதியவர் : செல்வம் சௌம்யா (4-Jan-17, 11:02 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 172

மேலே