சேமிப்பு
சிக்கனமே சேமிப்பை ஈனும் தாயாம்.
சிக்கனமின்றேல் சேமிப்பு இல்லை ஆகும் .
சிக்கனம்தான் வீடுகளை வாழ வைக்கும்
சிறந்தநெறி ; மறந்திடுதல் கூடாதேன்பேன் .
சிக்கனமே நாடுகளை வாழ வைக்கும்
நல்ல நெறி ; நாம் இதனை அறிதல் வேண்டும்
சிக்கனத்தைத் தருமனெனப் போற்றும் நாடு .
சிறப்பான நாடாக விளங்கக் காண்போம் .
மாணவர்கள் சிக்கனத்தை மனதிற் கொண்டால்
மலர்ந்து வரும் புதியதொரு மகிழ்ச்சிக் கூட்டம் .
காணுகிற காசெல்லாம் சேமிப்பானால்
கருதுகிற திட்டமெல்லாம் கைகூடும்மே !!!!!
சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொண்டால்
சேர்ந்திடுமே செல்வங்கள் நாட்டில் நாளும் .
வாழ்க்கையிலே இன்பங்கள் பெறுதல் உண்டாம்
வரமாக சேமிப்பு வளங்கள் சேர்க்கும் !!
இளவயதில் சேமிப்பை மேற்கொண்டால் என்றும்
இன்பமது தங்கிடுமே உண்மை யன்றோ ?
எந்நாளும் சொல்லிடுவேன் சேமிப்பு நன்றாம்
இந்நாளில் சாற்றுகின்றேன் ஏற்பீர் மக்களே !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்