வாழ்வது ஒருமுறை
உயிரோடு ஆயிரம் வருடம்
வாழ்வதில்லை யாரும்
வாழும் காலங்களிலே
நன்மைகள் பல செய்தால்
இறந்தபின்பு வாழலாம்
ஆயிரமாயிரம் காலங்கள்....
உன் நடைப்பாதையில்
முள் இட்டவனுக்கு முல்லை இடு
கல் இட்டவனுக்கு புல்லை இடு
பகைமை வளர்ப்பவரிடம்
நட்பு பாராட்டு..
மன்னிப்பு கருணை
பொருமை தியாகம்
மனிதம் நேர்மை
மனசாட்சி இருந்தால்
தெய்வம் உன்னுள் வசிக்கும்...
உழைப்பு உண்மை
நேசம் பாசம்
நட்பு நியாயம்
நன்றி இருந்தால்
தெய்வம் உன்னோடு பேசும்...
வாழ்வது ஒருமுறை
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்
கெட்டுபோவதில்லை
அன்புக்கு கட்டுபட்டு வாழ்ந்தால்
வாழ்க்கை பட்டுபோவதில்லை
தன்மானமும் பெண்மானமும்
காத்து வாழ்வோம்
வாழ்த்தும் நம்மை எதிர்வரும்
தலைமுறை...