பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா
அன்புடைய சோதரனே !
----- அரவணைக்கும் என்அண்ணன் .
சின்னஞ்சிறு பிள்ளையுடை
----- சிந்தனையைக் கொண்டவனே !
இன்றுனக்குப் பிறந்தநாளாம்
------ ஈடிலாப் பெருநாளாம் .
மன்றிலுமே நீவாழ
------ மனதார வேண்டுகின்றேன் .
அன்னையிடம் பாசத்தால்
------ அரசாள்வாய் எந்நாளும்
என்றென்றும் நலம்பேணும்
------ எல்லையிலா உறவுகளே !
பன்முறையும் சொல்லிடுவேன்
------ பண்பினாலும் நீயுயர்வாய் !
உன்தங்கை வாழ்த்திதுவே !
------ உண்டுனக்கு நல்லறமே !
சிறக்கட்டும் சிந்தனைகள்
----- சீர்பெறட்டும் உன்வாழ்வு .
மறக்கட்டும் மனவலிகள்
------ மாற்றங்கள் சேரட்டும்
உறவினர்கள் வாழ்த்தட்டும்
------ உற்றார்கள் வாழ்த்தட்டும்
பிறக்கட்டும் புதுவாழ்வு .
------ பிறந்தநாளில் நல்வாழ்வு .
சந்திக்கும் நாட்களெல்லாம்
---- சாதிக்கும் சோதரனாய்
எந்நாளும் என்முன்னே
------ ஏற்றமிகு அண்ணனாய்
சிந்தனைகள் சிறந்திடவும்
----- சிறப்பான வாழ்வுடனே
இந்நாளில் மட்டுமல்ல
----- எந்நாளும் நின்றிடுவாய் !!!!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன் நலமுடன் !
வாழ்த்து மடல் :- திருமதி . சரஸ்வதி பாஸ்கரன் . திருச்சி .