ஊமை வலி
முகத்திலே முறுவல் ஏந்தி
முதுகிலே குத்துகின்ற
நயவஞ்சக மனிதர்போல்
காக்குமென எண்ணி
காலில் அணிந்த செருப்பு
வஞ்சகம் செய்வதுபோல்
நமக்கு தெரியாமலே
பின் பக்க சட்டையை
சேறாக்கி பாழாக்கியதை
பார்த்தறிந்த போது
உள்ளம் கறைபட்டு
ஊமை வலி உண்டானது