ஏழை விளையாட்டுகள்

முட்டி மோதிய போதும்
ரத்தம் சிந்தவில்லை
கோலிகுண்டு
@@@@@@@@@@@@@@@@@
சிறுவனின் விளையாட்டில்
தலை சுற்றி விழுந்தது
பம்பரம்
@@@@@@@@@@@@@@@@
துரத்தும் சிறுவர்கள்
உருண்டடித்து ஓடுகிறது
டையர் வண்டி
@@@@@@@@@@@@@@@@@@
தாகம் எடுக்க ஓட்டியதில்
களைத்துப் போய் நின்றது
நுங்கு வண்டி
@@@@@@@@@@@@@@@@@@
ஊனமாக சிறுவன்
வெற்றியோடு முடித்தான்
நொண்டி ஆட்டம்
@@@@@@@@@@@@@@@@@@
- கி.கவியரசன்

எழுதியவர் : கி.கவியரசன் (9-Jan-17, 10:00 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 207

மேலே