என் காதலி
பெண்ணே பெண்ணே
உன் அழகில் பேரழகில்
நான் மயங்கியது உண்மையே
உன்னைப் பார்த்தமுதல்
உன்னையே மனதில்
பதியவைத்தேன் உண்மையே
உன்னை நான்
என் காதலியாய்
எண்ணி இருப்பதும் உண்மையே
உன்னை கண்ட நாள் முதல்
உன்னையே சுற்றி சுற்றி
வருகின்றேன் உண்மையே
இவையெல்லாம் நீ அறிவாயோ
நான் அறியேன் ஆயினும்
நான் கூறுவது அத்தனையும் உண்மையே
இதை அந்த அரசமரத்து விநாயகர்
சத்தியமாய் கூறுவேன்
நான் உன் மீது
பெரும் காதல் கொண்டுள்ளேன் உண்மையே
உன்னையே சுற்றி வருவதால்
அழகியே நீ மறந்தும் நினைத்துவிடாதே
நான் ஒரு காமுகன் என்று
நான் காமுகனும் அல்லன்
காதல் வேட்டைக்காரனும் அல்லன்
உன் பேரழகில் என்னையே இழந்த
உன் காதல் அபிமானி உன் காதலன்
என்னை ஏற்றுக் கொள்வாயோ
என் காதலுக்கு பதில்
நீ தரும் இனியே பதில் தான்
என் காதலுக்கு பரிசு
பெண்ணே பெண்ணே
பேரழகு பெண்ணே
நீ காதல் ரோசா
நான் உன் அழகில்
மயங்கும் வண்டு
ஏற்றுக் கொள்வாய் என்னை
என் காதலை நம் காதலாய் மாற்றிடுவாய்
இருவரும் சேர்ந்து
காதல் சொர்கம் சேர்ந்திடுவோம்
உல்லாசமாய் வாழ்ந்திடுவோம்
பெண்ணே பெண்ணே
அழகே பேரழகே
இன்னும் நீ மௌனமாய்
இருப்பதேனோ நான் அறியேன்
உன் மௌனம் தான்
நீ தரும் சம்மதம் என்று
நான் நினைக்கவா
இதோ என் காதலை
இந்த காதல் தடாகத்தில்
இந்த என் காதல் கவிதையாய்
மிதக்க வைக்கின்றேன்
ஏ பெண்ணே பெண்ணே
அழகே பேரழகே
இதை ஏற்றுக் கொள்வாய்
என் காதலுக்கு உன் காதலால்
உயிர் தந்திடுவாய்
நீ தானே என் காதலி !