அழகே உன் அழகினிலே

இதுநாள் வரை தேடி வந்தேன்
என் இதயம் திருட காத்திருக்கும் தேவதையை!
இன்று உனை நாடி வந்தேன்
நீயே அவளென தெரிந்த பிறகு,
புடவை கட்டி நீ வரும் வேளையில்
புயல் காற்றும் எனக்கு தென்றலடி!
நெற்றியில் விழும் முடியை விலக்கும் வேளையில்
என் நெஞ்சமும் விலகிப் போகுதடி!
நீண்ட உன் சடைப் பின்னலில்
எனையும் சேர்த்துப் பின்னி விட்டாய்!
உன் ஓர விழிப் பார்வையில்
எனையும் வெட்கப்பட வைத்துவிட்டாய்!
சிந்தாமல் சிதறாமல் நீ வைக்கும் குங்குமம்
உனை விட்டு நீங்காத வரம் வேண்டி நிற்கும்!
ஆயிரம் பூக்கள் உன் சிரிப்பில் பூக்கும்
மலர்க் காடென வண்டுகள் உன்னை மொய்க்கும்!
காற்றோடு கதை பேசும் கைகள்
பேசாதோ ஓராயிரம் மொழிகள்,
எப்போதும் எனக்கோர் ஆச்சர்யம்!
உனையும் சேர்த்து என் நெஞ்சில் சுமக்கின்றேன்
இருந்தபோதும் காற்றோடு மிதக்கின்றேன்
இவை யாவும் அழகே உன் அழகினிலே...

எழுதியவர் : ரா.விவேக் ஆனந்த் (9-Jan-17, 8:16 pm)
பார்வை : 256

மேலே