பிரிவில் என் காதல் மலரட்டும்
உனக்கு எனக்கு என்று எந்த பிரிவுக்கும் இடமில்லை,
நமக்காக நாம் வாழும் போது...
உன் சிரிப்பில் என் எல்லாமும் நிறைந்து இருக்கிறது....
என் கண்கள் உனக்காக கண்ணீர் வடிக்கிறது....
நாம் இருவர் என்றாலும், நம் கனவுகள் ஒன்றுதான்...
நேசங்கள் வேறு ஆனாலும், நம் சுவாசங்கள் என்றும் பிரியாது.......
மூச்சு விட மறந்தாலும் மறப்பேன், உன் பேச்சின் இசை கேளாத போது.....
என் வார்த்தைகள் நீயானாய், அதில் வாசகம் நீயானாய்....
பாதைகள் நீயானாய், என் பயணமும் நீயானாய்...
கண்ணில் பாவை நீயானாய், அதில் பார்வை நீயானாய்....
உதிரம் நீயானாய், அதில் துடிக்கும் இதயம் நீயானாய்....
என்னுள் நீயானாய், அதில் எழும் எண்ணங்கள் நீயானாய்.....
எல்லாமும் நீ ஆனதால் என் எல்லாமும் உனதானது...
நாம் என்று ஆகும் காலம் வரும் வரை காத்திருந்த வேளை, வேறாகிப் போவோம் என்று எண்ணவில்லை...
சிந்திய கண்ணீரெல்லாம் ஆவியாக உன்னை சேர துடிக்கிறேன்....
கானல் நீராகிட அந்த காற்றோடு கலந்திட காத்திருக்கிறேன்.....
நாம் ஆகி நமதுலகம் காண ஆசை கொண்டேன், இனி வேறாக வாழ வேண்டும் என்றால் உயிர் வாழும் ஆசை இல்லை எனக்கு!!....