என் விழிகளில் விழுந்தாயடி என்னுள்ளே கலந்தாயடி

உயிரோடிருக்கிறேன் உறவாய்
நீ வருவாயென ..... உன் நினைவில்
வாடுதடி என்தேகம் - என்னுயிரே
வாராயோ என்னிடமே .... ( என் விழிகளில் .. )



மூங்கிலினால் இசைக்கும்
ராகம் ; முழுவதுமே நம் காதல் கீதம் .
காற்றில் பற்றி எரியுதடி - கள்ளி
உனக்கு அது புரியலையா ??? (என் விழிகளில் ...)



உன் கனவிலே கண்ணுறங்க
கலையாத உன் நெனப்பு - அதில்
கரையுதடி காலை நேரம் .
என் எண்ணம் நெசமாகி போகுமாடி -?? ( என் விழிகளில் ..)



அங்கம் தொடாது
அங்கங்கே தெரியும் உன்
நெளிவழக பார்ப்பதற்கு
ஆச மிகத் தூண்டுதடி-தங்கம் . ( என் விழிகளில் ...)



பங்கம் வந்து விடுமோ
என்று பார்த்து பார்த்து
காதல் செய்தேன் . இதில் பங்கு போட
எவருக்கும் உரிமையில்லை . ( என் விழிகளில் ..)



என் இமைக்குள் இருக்கும்
இத்தனையும் இதமாக பேசுதடி .
இசைக்குள் இருக்கும்
சுகத்தையும் இசைக்குறேனடி மெதுவாக . (என் விழிகளில் ..)


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Jan-17, 11:53 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 109

மேலே