தாவணி காதல்
தாவணி என்ன தடவியல் மற்றமோ
தாமரை மலரின் இதழில் தோற்றமோ
தேடிய கண்களில் காந்தமோ
இமைகள் இசைக்கும் நேரமோ...
பெண்மையில் புது ராகமோ
தனிமையில் தனி தாகமோ
பார்வையில் ஓர் பரவசம்
பார்த்தால் இள மனம்
சிறகுகள் முளைத்த சின்னம்
வாழ்கையில் ஆயிரம் வண்ணம்...
உன் தாவணிக்குள் கூடு கட்ட வரலாமா
தாவணி தந்த தங்கமே உரசலாமா
தேவதை உன் நெஞ்சோடு சாயலாமா
நம் கதலில் அன்பை தொடலாமா..
உலக வாழ்கையில் புது அனுபவம்
உண்மை தேடும் ஒரு பயணம்
ஈர்ப்பு மொழி உன்னை தீண்டும்
காதல் பல கவிபாடும்
தாவணி இங்கே தடுமாறுமா
தடங்கல் இல்லா எனை சேருமா
உயிர் காதல் உனை சேர
உனக்காக காத்திருப்பேன்
தாவணி போட்ட நீ
சேலையில் சேரும் நேரம்
சேவைக்கு வருவேன் நானும்
தாவணியில் உனை பார்த்த காதல்..
தருவேன் வருவேன் உனக்காக
புது வாழ்நாள் என்றும் நமக்காக
தீண்டும் நெஞ்சம் கொண்டு வரலாமா
மலரின் அன்பை கண்டு
இதழ்கள் தந்து உயிர்தாங்கினாய்
இதயம் தந்து உனை தாங்குவேன்..