உழைப்பே உன்னதம்
![](https://eluthu.com/images/loading.gif)
உழைப்பே உன்னதம்!
உழைப்பு இருந்தால் களைப்பு வரும்
களைப்பு வந்தால் உறக்கம் வரும்
ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியம் வளரும்
இதுவே உழைப்பின் உன்னதம் !
அமர காவியங்கள் படைத்ததும்
அஜந்தா ஓவியங்கள் உருவானதும்
கலைஞன் கை உளி பட்டு
சிலைகள் பல உருவானதும்
ஆயகலைகள் அறுப்பத்திநான்கும்
அழகாக நாட்டில் வளர்ந்ததும்
உழைப்பின் உன்னதம் !
நிலவில் கால் வைத்ததும்
செய்வாய்க் கிரகம் சென்றதும்
புதுப்புதுக் கண்டுபிடிப்புகளால்
புத்துணர்வுடன் சொகுசாக வாழ்வதும்
உழைப்பின் உன்னதம் !
வளைந்து செல்லும் தொடர்வண்டியும்
வானில் பறக்கும் விமானமும்
கடலில் மிதக்கும் கப்பலும்
கணணி கைபேசி உருவானதும்
உழைப்பின் உன்னதம் !
தஞ்சைப் பெரிய கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவில்
மகாபலிபுரம் பாறைச் சிற்பங்கள்
உலக அதிசயங்கள் உருவானதும்
உழைப்பின் உன்னதம் !
பசிக்கு புசிக்க உணவும்
பகட்டான ஆடை ஆபரணங்கள்
பார்க்க படிக்க கண்கண்ணாடி
மக்கள் மகிழும் தொலைக்காட்சி
மாற்றுத் திறனாளிகளும்
முழுத் திறனாளிகளாக மாற
நவீனக் கருவிகள் உருவானதும்
உழைப்பின் உன்னதம் !
உழைப்பாளர் சிலையில் கூட
உழைப்பாளிகள் எல்லாம்
உழைத்துக் கொண்டே இருப்பது
உழைப்பின் உன்னதம் !