படிமம்

படிமம்
++++++

புதிதாய் ஒரு வீட்டுக்குச்
செல்லும்போது, அங்குள்ள
சுவர்க் கிறுக்கல்களே
குறியீடாய் உணர்த்தி விடுகின்றன...
அந்த வீட்டில் குழந்தைகளின் இருப்பையும்,
அவை இடம் பெற்றுள்ள உயரம்
அவர்களின் வயதையும்..!

- ஆ.மகராஜன்,BSNL,திருச்சி.

எழுதியவர் : ஆ.மகராஜன் (16-Jan-17, 9:03 pm)
பார்வை : 73

மேலே