இறைவியாய் அன்னை

விதையோ மண்ணின் கொடையோ தாய்
தந்தாய் வரம் தாங்கும் நிலமாய்
அன்பே உருவாய் கருணை நிழலாய்
உலகில் படைத்தாய் உன்னத உறவாய்......

தேனை ஊற்றி அமுது கொடுத்தாள்
ஊனை உருக்கி உழைத்து வளர்த்தாள்
உள்ளங்கை இரேகைகள் தேய்ந்து போனாலும்
உள்ளம் வைத்து எனைக் காத்தாள்......

சேலைத் தலைப்பில் தலைத் துவட்ட
சோலை மலரின் வாசம் கண்டேன்
வானம் கருக்காது மழைப் பொழிந்திட
பாசத்தின் சாரலில் நாளும் நனைந்தேன்......

பசுந்தளிர் மென்மை மனம் உடையவள்
பசுவிற்கும் தானமாய் குணம் ஈந்தவள்
பொசுக்கும் நெருப்பாய் துன்பம் வந்தும்
எனை நெருங்காது கண்ணீரால் அணைத்தவள்......

விழியின் வாசலில் அன்பால் பூட்டினாள்
வழிகள் அமைத்து அகிலத்தைக் காட்டினாள்
இறைவா நீ தந்த வரத்தில்
இறைவியாய் அன்னையாய் அவள் வந்தாள்.....

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 1:02 pm)
பார்வை : 522

மேலே