மௌனம்
உன் சிரிப்பில் பல மலர்களை
பார்த்தேன்.
உன் கண்ணில் பல நட்சத்திரம்
பார்த்தேன்.
உன் அழகில் அந்த தேவதை
பார்த்தேன்.
உன் நடையில் அந்த வானவில்
பார்த்தேன்.
உன் மொழியில் பல கவிதை
பார்த்தேன்.
உன் மனதில் ஒரு குழந்தை
பார்த்தேன்.
அன்பே ஆனால்,
உன் மௌனம் பேசும் மொழி,
புரியாமல்
திகைக்கிறேன்!!!!