அன்னையே
உதிரத்தில் உருவான கருவாய்
கருவில் உருவான உடலாய்
உயிரில் கலந்த சுவாசமாய்
என்னை ஈன்றெடுத்த அன்னையே
பசியோடு அழ
பாலூட்டமாய்
பசியாற்றி வளர்த்தாய்
பாசமாய்
ஆசையாய் படிக்க வைத்து
பார்த்து ரசித்து மகிழ்ந்தாய்
எனக்கொன்று என்றால் துடித்தாய்
நோய் நொடியின்றி காத்தாய்
அன்னையே நீ நீடுழி வாழ்க.