நல்லதோர் வீணை செய்தே..

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..
பெண்ணவள் பெருஞ்சக்தியவள்.. உரிமையை பறிப்பது தகுமோ...?

ஆசைகளைச் சுமந்தின்பம் தேடும் வாழ்வில்..
மனதிலே உருவாகும் வேட்கை
பணம் பொருள் பெரிதென்றேகண்ட நெஞ்சம் கடமைகளை கருத்தில் கொள்ளாதிருப்பது சரியாகிடுமோ...!

பெண்ணின் ஆசையினை மண்ணில் புதைத்தே...
சுயநல மனிதனை கரம் பிடித்துக் கொடுத்திட்டாளவள்...
வாழ்வு தான் செழுமையாகிடுமோ...?

தேசமெங்கள் தூயமண்ணில் தோற்கா
பெண்ணவள்...
துன்பம் நிறைந்த வாழ்வில் பெரும் வீரச்சக்தி...
அநீதிக்குக் குரல் கொடுத்தே நல்லதை நிலை நாட்டிட வேண்டுமேயவள்.. தமிழ் திருநாட்டிலே...!

அமைதியாய் இருந்தே அடிபணிந்து போவதால் கோழையென்று ஆகிடுமோ..?
வீச வருங்காற்றுக்கோர் வலிமை உண்டே..
வெகுண்டெழும் புயலுக்கும் வீரம்
உண்டே....!

வட்ட வடிவ திலக நுதல் தீட்டும்
மங்கை...
கச்சிதமாய் தன் வலிமை கொண்டே..
வீர நடையில் நடந்தாளவள்..
பெண் அடிமைத் தனத்தை அடியோடு அழித்தே...
சம உரிமை நிலைநாட்ட நாட்டில்..!

சிறோஜன் பிருந்தா
மட்டக்களப்பு

எழுதியவர் : சி.பிருந்தா (25-Jan-17, 1:39 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 285

மேலே