அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமைகள் சில
வெற்றி கொடி, தொப்புள் கொடி, என்றும் எங்கள் தேச கொடி
உரிமை கடமை உயர்வு என்று அரசியலை தந்த கொடி நம் தேச கொடி
பேசும் உரிமை எழுதும் உரிமை தகவல் கோரும் சட்ட உரிமை
கருது கூற வந்த உரிமை சேவை செய்ய சட்ட கடமை
எழுத படிக்க எங்கும் வசிக்க தொழிலை தொடங்க உரிமைகளை அள்ளித்தந்த சட்டம்
நம் அரசியல் சட்டம்
மக்களால் மக்களுக்கு மக்களே தம்மை ஆள மக்களாட்சி மாண்பு உரிமை தந்த
சட்டம் நம் அரசியல் சட்டம், ஜனநாயகம் சமதர்மம் சமத்துவம் நீதி நேர்மை உள்ளடங்கிய
சட்டம் நம் அரசியல் சட்டம், நீதி மன்றம் சட்ட மன்றம் நாடாளும் மன்றம் என
அனைத்தையும் தலைமை தாங்கும் சட்டம் நம் அரசியல் சட்டம்
அமைதி வளம் வளர்ச்சி காண சட்டம் ஒழுங்கு மாண்பு பேண இறையாண்மை
காத்திடும் சட்டம் நம் அரசியல் சட்டம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு சட்டங்களை
மாற்றம் செய்யும் வழிமுறைகள் தந்த சட்டம் நம் அரசியல் சட்டம்.
எந்த நாடும் பெற்றிராத குடிமகனின் அதிகாரம் சரித்திரம் நிரந்தரம் அதுவே
நம் அரசியல் சட்டம், நாட்டு பற்றை பேணி வளர்ப்போம், சுதந்திர போராட்ட தலைவர்கள்
தியாகிகள் என சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைவரையும் நினைவு கூர்ந்தும், அவர்களின்
நல் வழியை என்றென்றும் கடைப்பிடித்தும் வாழ்வோம், நாட்டிற்காக உயிரை கொடுத்தேனும்
தேசத்தை வல்லரசாக்க பாடுபடுவோம்..வந்தே மாதரம் வந்தே மாதரம், ஜெய் ஹிந்