நாட்டு பற்று பாடல் 68 ஆவது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
நாட்டுப்பற்று பாடல்
வந்தே மாதரம் என்றும் நம் மந்திரம்,
தேச தாயின் பிள்ளைகள் நாம் அனைவரும்
இந்தியாவே நமக்கெல்லாம் தாயகம்
தேசிய கொடியை நாளும் வணங்குவோம்
அடிமைத்தனம் ஒழித்தது நம் சுதந்திரம்
உரிமைகளை கொடுத்தது நம் சாசனம்
குடியரசு கொடுத்தது நம் சுதந்திரம்
சட்டங்களை தந்தது நம் சாசனம்
வந்தே மாத்திரம் என்றே முழங்குவோம்
தேசிய கீதத்தை நாம் துதித்திடுவோம்
தேச தாயின் பிள்ளைகள் நாம் அனைவரும்
ஒன்றிணைத்து காப்போம் நம் சுதந்திரம்
வாழ்க வாழ்க வாழ்க நம் பாரதம்
போற்றி போற்றி வளர்ப்போம் நாம் அனைவரும்
மனித நேயத்தை தினமும் வளர்த்திடுவோம்
ஒருவருக்கொருவர் நாம் உதவிடுவோம்
மக்கள் பணி என்றென்றும் நாம் செய்திடுவோம்
நல்லரசு வல்லரசாய் ஆக்கிடுவோம்
இந்தியர்கள் நாம் என்றும் ஜெயித்திடுவோம்
நாட்டிற்கு பெருமைகளை குவித்திடுவோம்
திறமைகளை நொடிப்பொழுதும் வளர்த்திடுவோம்
நல் அனுபவத்தை நாள்தோறும் பகிர்ந்திடுவோம்
உலகம் போற்ற நாம் என்றும் வளர்ந்திடுவோம்
வந்தே மாதிரம் என்றும் முழங்கிடுவோம்
வாழ்க ஜனநாயகம் வளர்க சமுதாயம்
நல்லதே செய் நல்லதே நினை நல்லது நடக்காதிடினும் தீங்கு நடக்காது
அறவழியில் செல் அறிவியலை வளர்த்து விடு
நாடு செழிக்கும் வீடும் செழிக்கும்
நம் உயிரை கொடுத்தேனும் இந்திய தேசத்தை காப்போம்
ஜெய் ஹிந் ஜெய் ஹிந் ஜெய் ஹிந் ஜெய் ஹிந்