வருணனின் வதை

தூத்துக்குடி மாநகரின் சாலை...
களிப்புடன் கடந்து சென்றேன்
கண்டதும் கரைந்தேன்
களமிறக்குகிறேன் கவி நடையில்...

வருணனின் வதை
சித்ரவதையோ சித்திரையில்...

வருணா வதை செய்தாய்
நீண்ட வரிசையில் நிற்கச் செய்தாய்
கால் கடுக்க காக்க வைத்தாய்...

குழாய்த் தண்ணீர் பிடிக்க
கூட்டம் கூட்டமாய் காக்க வைத்தாய்
அவர்தம் குமுறலை வெளிக்காட்டச்செய்தாய்...

கடந்த ஆண்டு கரையைத் தாண்டி வதை செய்தாய்
அனைவரையும் கடிந்து கொள்ளச் செய்தாய்...

இந்த ஆண்டு உன் திருவிளையாடல்
இப்படி ஆரம்பமோ?

பரம்பொருளே பகை தீர்க்கிறாயோ?
பஞ்ச பூதங்களைச் சீண்டும் மானிடரை
பதை பதைக்க வைக்கிறாயோ?

வருண பகவானே வசைபாட மனதில்லை
இசைவாய் மாறுவாய் என்னும் நம்பிக்கை...
இன்னும் எங்களுக்கு உள்ளதால்...

நெஞ்சு பொருமுகின்றது வருணபகவானே
நீ பொழியாது பொய்த்ததால்...

ஓ இறைவா எங்கே இருக்கிறாய்?
ஏனிந்த பாராமுகம்...
இயற்கையை இசையவிடு
அன்னை பூமியை நனைய விடு
எங்கள் தலைமுறை செழிக்க அல்ல... பிழைக்க...

என் சிரம் தாழ்கிறது...
கரம் குவிகின்றது
உன் கருணையை எதிர்பார்த்து...!?
வருவாய்... வரம் தருவாய்...!

எழுதியவர் : அருள்சிங், சிவந்திபுரம் - (27-Jan-17, 11:56 am)
சேர்த்தது : Arulsingh
பார்வை : 128

மேலே