என் அழகு அம்மா

திகட்டா பார்வை சுகம்
திகழும் நேசம் சுகம்
வாழ்த்தும் வார்த்தை சுகம்
வழக்கில் மௌனம் சுகம்
மூழ்கா வானம் சுகம்
முழங்கும் மோகம் சுகம்
தீயின் வேட்கை சுகம்
தொடரும் வழிகள் சுகம்
உதிரா பூக்கள் சுகம்
உலகின் வாசம் சுகம்
விலகா சோகங்களிலே
உலவும் வாழ்க்கையிலே
என்றும் என்றென்றும்
எங்கும் எங்கெங்கும்
தாயின் தழுவல் சுகம் ....

எழுதியவர் : விஜயகுமார் ஜெயராமன் (27-Jan-17, 3:02 pm)
Tanglish : en alagu amma
பார்வை : 193

மேலே