இப்படியும் ஒரு சிலர்
பொன்னான காலத்தை வீனடித்து
கடவுளை நிந்திக்கிறான்
வந்த வாய்ப்பை நழுவவிட்டு
விதண்டாவாதம் பேசுகிறான்...
உழைப்புக்கு நீர் ஊற்றாமல்
வெற்றிக்கனிக்கு எட்டுகிறான்
கனவு காண்கிறேன் என்று
கற்பனையில் வாழ்கிறான்...
காதல் என்ற மாயையில் சிக்கி
சின்ன பின்னமாகிறான்
குறிக்கோளில்லாமல்
கோள்களை நம்புகிறான்...
கடல் தாண்டியும் திரவியம்
தேடு என்பதை மறந்து
அல்லும் பகலும் வாளா
இருந்துவிட்டு அதிர்ஷ்டம்
இல்லை என்று புலம்புகிறான்...