தமிழா வீழ்ந்திடாதே
தமிழா வீழ்ந்திடாதே..!!!
< =======================>
தமிழா வீழ்ந்திடாதே
உன் முயற்சி அதை
துறந்திடாதே ...!!
எட்டப்பன் இன்னும்
மடியவில்லை அதை நீ
மறந்திடாதே ,
தமிழா வீழ்ந்திடாதே..!!
நெல் போல் இருக்கும்
புல் போல்.. தமிழனின்
துரோகம் தமிழனே...
இருந்தும் பயந்திடாதே..!!
நல் சமுதாயம் படைப்பது
உனது கடமை என்ற
நல் எண்ணத்தில் இருந்து
விலகிடாதே...
தமிழா வீழ்ந்திடாதே..!!!
சமூக நலன் காக்க -நீ
சிந்திய இரத்தம் அதை
வீணாக்கிடாதே ...!!
சொல்லுக்கும், வில்லுக்கும் ,
நட்ப்புக்கும், உண்மைக்கும் ,
நன்றிக்கும், கருணைக்கும்,
பண்புக்கும், பரிவுக்கும்,
சொந்தக்காரர்கள் நாம்
இதை உண்மையாகாமல்
விட்டுடாதே ..!!!
உலகையே திரும்பி பார்க்க
வைத்த கூட்டத்திற்குள்
சுயநலத்திற்க்காக ஊடுருவிய
புல்லுருவிகளை கண்டு
நடுங்கிடாதே ,,,
தமிழா வீழ்ந்திடாதே ..!!!
அரசியல் கூட்டத்தையே
நடு நடுங்க வைத்த
ஒற்றுமையை எவர்
அடக்க நினைத்தாலும்
அடங்கிடாதே....
கிடைத்த வாய்ப்பு அது மீண்டும் கிடைக்காதே
என்றும் இந்தியன் என்றுரைக்க மறுக்காதே
அவ்உணர்வை என்றும் நீ மறக்காதே
நாளைய பொழுது என்னவாகும்தெரியாதே..... ??
கிடைத்த பொழுதை வெற்றியாக்காமல் முடிக்காதே..!!
உன் வீரம், வேகம், அதை உன்னுள் அடைக்காதே....
தமிழன் என்ற உணர்வு
மனிதன் என்ற உணர்வுடனும்
ஒன்றாய் கலந்து
மனிதம் பேண ...
மக்கள் நலம் காக்க...
தவறிடாதே ..!!!
இருள் நீங்கி நாளை
விடியல் நிச்சயம் நமதே
மனிதா வீழ்ந்திடாதே ....
என்றும் என்றென்றும் ..
ஜீவன்