உருகுலைந்த என் பூமி

வானத்தையும் பூமியையும்
நம்பி வாழும் என் வாழ்வில்
வானம் பொய்த்தால்
பூமி என்ன செய்யும்
நான் சிந்தும் கண்ணீர்
பூமிக்கு தெரியாமல் போனாலும்
சாமிக்கு தெரியுமே
அந்த சாமியும் வாளா இருந்தா
பூமி என்ன செய்யும்...
உழைத்து உழைத்து
உருகுலைந்து போன
என் உருவத்துக்கு
உறக்கம் வருகிறது
உறங்கிக்கொள்கிறேன்
உன்ம டியில் நிரந்தரமாக...