புதிய பார்வை
புன்னகை எனும் பூக்கள் பூமி மலரட்டும்
நயவஞ்சகமும் நடிப்பும் இல்லா நண்பர்கள் உலகம் உதிக்கட்டும்
உண்மை எங்கும் விளையட்டும்
பொய்கள் மாண்டு போகட்டும்
நன்மை எனும் விளைச்சல் பெருகட்டும்
மனித நேயம் மலரட்டும்
மக்கள் உள்ளம் குளிரட்டும்...
பூமி எங்கும் பூக்காடு ஆகட்டும்
கேட்கும் நேரம் மழை பொழியட்டும்
பசிக்கும் நேரம் உணவு கிடைக்கட்டும்
உலகம் யாவும் மகிழ்ச்சி பொங்கட்டும்
கண்ணாடி போல் மனிதன் வாழட்டும்