விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் என்ற பெயரை தெரிந்து வைத்தார்களா...
தெரியாமல் வைத்தார்களா...
தெரியவில்லை.
அதில் வரும் சிறப்புகள்
இரண்டு உயிர்மெய் எழுத்துகளுக்கு பின் ஒரு மெய் எழுத்து
என்று இரண்டு முறை
புரியவில்லையா?
விழுப்/புரம்
இதில் என்ன இருக்கிறது
இல்லை இருக்கிறது
இரு உயிர்மெய் எழுத்துகளுக்கு பின் ஒரு மெய்யெழுத்து (மூன்றாவது ,ஆறாவது இடம்)
ப் - அப்பா என்ற வார்த்தையில்
ம் - அம்மா என்ற வார்த்தையில்
உயிர்மெய் எழுத்துக்கள் -சேய்கள்
மெய்கள் - பெற்றோர்
விழுப்புரம் என்பதில் வரும்
உயிர்கள்
இ
உ
அ
அ, இ, உ -சுட்டெழுத்து
விழுப்புரம் - என்பதில் நெடில் இல்லை
அண்மை சுட்டு அருகிலும்
அண்மைக்கும் சேய்மைக்கும் இடைப்பட்ட சுட்டு இடையிலேயும்
சேய்மை சுட்டு இறுதியிலும் அமைந்துள்ளது...
இடையினம் - வி ழு ர
வல்லினம் - ப் பு
மெல்லினம் - ம்
( வல்லினமும்
மெல்லினமும்
சேர்ந்தது தான்
இடையினம்..... )
வல்லினமும் - ப்
மெல்லினமும் - ம்
சேர்ந்தது தான்
எங்கள் இடையினம்
எங்கள் இடையினம்... ) )
தமிழுக்கு சிறப்பு
ழ
அந்த ழ வும் இங்கே இருக்கிறது
தமிழ் = தமிழு (த்+அ, ம்+இ,ழ்+உ)
( உயிரெழுத்துகளில் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் ஆகும்.
அ என்ற எழுத்து கண் தோன்றாத சேய்மையையும்,
இ என்ற எழுத்து அண்மையையும் ,
உ என்ற எழுத்து சேய்மைக்கும், அண்மைக்கும் இடைப்பட்டுக் கண்ணுக்குத் தெரியும் நிலத்தையும் சுட்டுவன.
இன்று வழக்கில்
அ,இ இருக்கிறது
அ -அவன் ,அது (சேய்மை)
இ-இவன்,இவள்,இது (அண்மை)
உ சுட்டெழுத்து - யாழ்ப்பாணத்து தமிழில் வாழ்கிறது.
( தற்காலத்தில் 'உ' என்ற சுட்டெழுத்து தமிழ்நாட்டில் வழக்கில் இல்லை. ஆனால், பழங்காலத்தில் அவ்வெழுத்து வழக்கில் இருந்தது . அதேவேளை இந்த "உ" சுட்டெழுத்து யாழ்ப்பாணத் தமிழ் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தற்போதும் தொடர்ந்து இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். 'உ' என்ற சுட்டு பல பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது. சேய்மைக்கும் அண்மைக்கும் இடையில் உள்ளவற்றைக் குறிக்க 'உ' என்ற சுட்டெழுத்து பயன்பட்டது. நடுவிலுள்ள பொருள்களையும், உயரத்திலுள்ள பொருள்களையும், பின்பக்கம் உள்ள பொருள்களையும் சுட்ட 'உ' பயன்படும்
சான்று:
உம்பர்- மேலே என்ற பொருள் தரும்.
உப்பக்கம் - முதுகுப்பக்கம் என்ற பொருள் தரும்.
உதுக்காண் - சற்று தூரத்தில் பார் என்ற பொருள் தரும்.)
விழுப்புரம் - ஈரசைச் சீர்
விழுப்/புரம் - நிரை /நிரை - கருவிளம்
விழுப்புரம் - ஐந்து மாத்திரை
(விழுப்புரம் என்ற பெயர் வர காரணம்
காரணை விழுப்பரையன்)
~ பிரபாவதி வீரமுத்து