உன்மடி தேடித்தானே
நிலவும் தூங்கிட
உன் மடி கேட்குதடி!
வானும் அதற்கு
வழி அமைக்குதடி!
தென்றல் வந்து
தாலாட்ட
உன் கூந்தலோ
புயலாய் வீசுதடி.!
மேகத் தலையணை
தவிர்த்து
உன். தேகத் தலையணை
தேடுதடி!
பூமியிலே எத்தனையோ
பொண்ணு இருக்கு
உன் ஒருத்தி மேல மட்டும் தான்டி
அதுக்கு காதல் கிறுக்கு!
இரவெல்லாம் கண்விழித்து
களைத்திருக்கு!
உன் மடி தேடித் தானே
காத்திருக்கு!..........
த.மணிகண்டன்.....