விழியோரம் வந்தவளே

விழியோரம் வந்தவளே! - என்
வழியெல்லாம் நின்றவளே!

இருட்டு கடை அல்வா போல
கிருட்டுனு தான் உள்ள வந்த!
சுருட்டி மடக்கி என் மனச
உருட்டி கொண்டு நீ போன!

தாகம் தீர்க்கும் தாமிரபரணி - காதல்
மோகம் தீர்க்கும் உன்மேனி!
யாகம் வைத்து என்னில் நீயும்
தேகம் முழுக்க பரவிபுட்ட!

குற்றாலத்து அருவி தண்ணீர்
உன் வாசல் தேடி வந்ததடி - நீயும்
குளிக்க மறுத்ததாலோ
குதித்து தன்னை மாய்க்குதடி!

திருட்டுக்கார கூட்டமெல்லாம்
பாளையங்கோட்டை சிறையினிலே!
திருடி நீயும் என்னைத் திருடி
வைத்தாய் மனசிறையினிலே!

பொதிகை மலை சந்தனமாய்
என்னை உரசி பூசிக்கிட்ட!
போகிற போக்கில் என்னை எடுத்து
முந்தானையில் சொருகிகிட்ட!

தீண்டல் இல்லா புது சுகத்தை
நாளும் நீயும் கொடுத்தாயடி!
தூண்டல் இல்லா சுடர்விளக்காய்
நானும் தினம் எரியுறேன்டி!

அகிம்சையில் எத்தனை இம்சையடி
அதில் நீயே எனக்கு குருவடி!
அகில் மணக்க மனசெல்லாம்
திகில் ஒன்றும் கொடுத்தாயடி!

நெற்றியில் விழும் ஒற்றைமுடி - உன்னை
சுற்றி வர தூண்டுதடி
புற்றில் புகுந்த நாகமாய்
பற்றிக் கொண்டேன் உனை நானடி!

திங்கள் முதல் ஞாயிறு ஈற்றாய்
தினமும் உன் தரிசனம் காண
திசைகள் எட்டும் அழைந்தேனடி
தித்திக்கும் இன்பம் பெற்றேனடி!


த.மணிகண்டன்.

எழுதியவர் : தங்கமணிகண்டன் (29-Jan-17, 8:50 am)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 472

மேலே