மகத்துவம் கொண்ட ஆசான் - தரவு கொச்சகக் கலிப்பா
மகத்துவமே கொண்டவரே ! மரபுப்பா ஆசானே !
சகத்தினிலே சீர்பெற்று சடுதியிலே வந்தீரே !
அகத்தினிலே கண்ணியமே ! அகலாதே எந்நாளும் !
பகலிரவு பாராது பாடந்தனைக் கற்பித்தீர் !
பிறக்கின்ற போதினிலே பிறழாது எழுதிவைத்தான்
இறக்கின்ற காலமோன்றே இயல்பான நடப்பென்று .
மறக்கின்ற நிலையில்லை மாறட்டும் மனத்துயரம் .
உறவாக நாங்களுமே உள்ளன்பால் அழைக்கின்றோம் .
முகம்பார்க்க முடியாமல் முழுமையாக ஆறுதலும்
அகம்பார்த்து நோக்கிடுங்கள் அத்தனையும் மாறிவிடும் .
சுகந்தன்னைத் தமிழன்னை சுகந்திரமாய் வழங்கிடுவாள் .
முகநூலின் பதிவுகளில் முகங்காட்ட வாருங்கள் .
அழைக்கின்றோம் ஆசானே அன்புள்ள நேசத்தால்
தழைத்தோங்கும் தமிழ்மொழியும் தணியாத தாபத்தால் .
உழைத்திடுவீர் தமிழன்னை உறவாக நின்றிடுவாள் .
அழைக்கின்றோம் ஆசானே ! ஆறுதலும் பெறுவீரே !
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்