தாயின் மஹிமை

சென்றுவா மகனே சென்றுவா
வீரவாள் ஏந்தி சென்றுவா
வீரவாகைச் சூடி திரும்பி வா
வெற்றி உனக்கே என்று நினைத்து செல்
சென்று வா மகனே சென்றுவா
இதை இந்த வெற்றி திலகம்
உன் நெற்றியில் இப்போதே இட்டுடுவேன்
அந்த வேலவன் உனக்கு வெற்றி தந்திடுவான்

சென்றுவா மகனே சென்றுவா
வீரவாள் ஏந்தி சென்றுவா
வீரவாகைச் சூடி திரும்பி வா

(இப்படித்தான் சங்க காலம் முதல் இடைக்காலம் வரை
அன்னையே மைந்தனுக்கு வீரம் ஊட்டி வளர்த்தாள் தாய்ப்பாலுடன்)

மகன் அவன் வீரத்தில் வீரன் சூரன்
கல்வி கேள்வியிலும் அதி சூரன்
அவையோர்முன் நிறை குடமாய் நிற்பவன்
வல்லவனுக்கு வல்லவன் நல்லவன்
சொல்லடக்கம் கொண்டவன்
என்று சான்றோர்கள் எல்லாரும் கூற
தாய் அவள் சொல்லொணா பூரிப்பு கொள்கின்றாள்
ஈன்றப் பொழுதைவிட

(இதுவும் அக்கால தாய், மகன் நல்லவன் என்பதைக் கேட்டு
அடையும் மகிழ்ச்சி )

நாம் இருக்கும் இக்காலத்திலும்
தம் மக்கள் வெற்றிக்கு முன்னிற்பவள்
தாய் தான் என்று கூறிடலாம்
தந்தையின் பாகம் வெற்றியில் உண்டு எனினும்
தாயின் அன்பில்,அரவணைப்பில் பிள்ளைகள்
நாடும் வீடும் மெச்சும் நல்லோர்களாய்
திகழ்கிறார்கள் எப்போதும்

இன்றைய கன்னி
நாளைய தாய்
தாய் பெற்றுத்தருவாள்
நல்ல பிள்ளைகள்
நானிலம் போற்றும் பிள்ளைகள்
இதில் அவள் அடையும் மகிழ்ச்சிக்கு
எல்லை ஏதும் இல்லை

இன்றைய பெண் தான்
நாளையத் தாய்

பெண்ணைப் போற்றுவோம்
பெண்மையை காத்திடுவோம்
தாய் குலம் தான்
நம்மை படைக்கும் சக்தி
நமக்கு நலம் தரும் சக்தி

தாயில்லாமல் நாம் இல்லை
வையகமும் இல்லை

தாயே தெய்வம் என்றும்

எழுதியவர் : (31-Jan-17, 4:21 pm)
பார்வை : 89

மேலே