மருத்துவம் எனும் மகத்துவம் - தரவு கொச்சகக் கலிப்பா

மருத்துவத்தின் மகிமைதனை மகத்துவமாய் எடுத்துரைப்பேன்
திருப்பங்கள் வந்துசேரும் தீர்ந்துவிடும் நோய்களுமே
வருத்தங்கள் வேண்டாமே வளமான வாழ்க்கையுமே
சுருக்கங்கள் முகத்தினிலே சுமையில்லை நீயுணர்வாய் !!!


நோய்களுக்கு மருந்தாக நொடிப்பொழுதும் துன்பமிலா
வாய்நிறைய மருந்துகளால் வாட்டுகின்ற துயர்நிலையால்
பாய்மீதில் படுத்திடவும் பாசமிகு மருத்துவரும்
தாய்போல மாறியுமே தந்திடுவார் மருத்துவமே !!!


வாழ்வினிலே இன்பதுன்பம் வந்திடுதல் முறையன்றோ !
தாழ்விலா வாழ்க்கைக்குத் தக்கதொரு உடல்நிலையை
மூழ்கிடாத வகைதனிலே முழுதாக நலம்பெற்றே
ஆழ்ந்திடுவர் சுகமாக அகன்றிடுமே வேதனையும் !!!


நலம்பெறவே வேண்டுமெனில் நல்லதொரு மருத்துவரைக்
குலம்தழைக்க நாடிடுதல் குறைவில்லா மகத்துவமே !
மலரவேண்டும் நம்நாட்டு மருத்துவமே நல்வாழ்வு !
உலராத வாழ்க்கைக்கு உலகாளும் எந்நாளும் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-17, 8:07 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 48

மேலே