காதல்

உன்னை கண்ட பின்பு தான் அழகின் அர்த்தத்தை உணர்ந்தது எனது விழிகள்....
உனது குறளை செவித்த பின்பு தான் வார்த்தைகளின் இனிமையை உணர்ந்தது எனது செவிகள்......
உனது கரங்களை பற்றிய பின்புதான் என் விரல்களின் இடைவெளிகான காரணத்தை உணர்ந்தது எனது கரங்கள் .....
உன் அன்பை உணர்ந்த பின்புதான் அன்பின் ஆழத்தை உணர்ந்தது எனது இதயம் .....
உன் அன்பின் ஆழத்தை அதிகம் உணர்ந்ததால் தானோ என்னவோ என் இதயமும் எனக்காக துடிக்காமல் உனக்காக துடிக்கிறது ..
அன்பின் ஆழத்தை உணர்த்தி விட்டு சென்ற நீ பிரிவின் வலியை உணர்த்தாமல் உணர்த்திவிட்டு சென்றாய்...
ஒன்றை மட்டும் விட்டு சென்றிருக்கிறாய் ஆம் உன் நினைவுகளை ..
உன் நினைவுகளை மட்டும் சுவாசிக்கிறேன் காற்றாக அல்ல என் உயிர் மூச்சாக ..
என்றும் உன் நினைவுகளுடன் ,
Kutty Waste Sathish

எழுதியவர் : குட்டி வேஸ்ட் சதிஷ் (31-Jan-17, 5:44 pm)
சேர்த்தது : kuttysathish
Tanglish : kaadhal
பார்வை : 338

மேலே