மயிலிறகு

மயிலிறகு !!!


மயிலிறகுத் துயில்கொள்ள
------ மன்மதனும் வந்திடுவான் .
ஒயிலாக இருக்கின்ற
------- ஓரக்கண்ணால் பார்க்கின்ற
துயிலெழும் தேவதையை
------- துவளாமல் அணைத்திடவே
வெயில்கூட தணிந்திடுமே !
------ வேதனையும் மாறிடுமே !


புத்தகத்தின் மையத்தில்
------ பூவாகி உறங்கிடுவாள்
பத்தரைமாதத் தங்கமடி
------ பார்வையிலே கொள்ளைகொண்டாய்
சித்தம்மிகக் கலங்குதடி
------- சித்திரமே வாஅருகே !
புத்தம்புது மலர்போலே
------ புன்னகையை வீசுகின்றாய் !


நினைத்தவுடன் உனையும்நான்
------- நித்திரையைக் கலைத்திடுவேன் !
உனையன்றி யாரைநான்
------- உறவாக எண்ணுவது ?
எனைநீயும் விட்டுவிட்டு
------- எனக்குள்ளே மறைகின்றாய் !
மனையாளாய் வந்திடுவாய்
--------- மயிலிறகே என்னவளே !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-17, 4:58 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 119

மேலே