அப்பா

அப்பா என்ற சொல்லில்
அகிலமே அடக்கம் !!!

உன் தாயிற்கு நன் மகனாய்
உடன் பிறந்தோர்க்கு
என்றும் துணையாய்

கட்டிய மனைவிக்கு
என்றும் காப்பாளனாய்

பெற்றெடுத்த அன்பு
குழந்தைகளுக்கு
நல்ல நண்பனாய்
சிறந்த ஆசானாய்
அன்பு தகப்பனாய்

இருந்து வழி நடத்தியவன் !!!
இன்று இல்லை
எனும் போது
வாழ்க்கையில்
ஏதோ ஒரு வெற்றிடம் !!!

நிறைய முறை
நினைத்ததுண்டு !!!

நீங்கள் இந்த உலகை விட்டு
செல்லும் போது நானும்
உடன் வருவேன் என்று !!!

ஆனால் இன்னும்
ஜடமாய் வாழ்கிறேன்
இப்பூவுலகில் !!!

உண்மையில் எனக்கு
உங்கள் மேல்
அன்பு இல்லையோ !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (31-Jan-17, 6:03 pm)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : appa
பார்வை : 109

மேலே