அன்பின்றி

பசியின்றி ஏழை உறங்கிடின் - அங்கணம்
மறைந்திடும் உணவு சிதறலும்
வீண் உணவு செலவுகளும்
இரு கரங்களும் பசியாற்றும்
உணவை பகிர்ந்து.....
இறப்பின்றி விவசாயம் விளைந்திடின்
இரப்பவை இல்லாமல் சமத்துவமாய்
நிமிர்ந்திடும் தேசம்
இலவசங்களை தவிர்த்து.....
நீர் பிரிவினையின்றி மக்கள் வாழ்ந்திடின்
மதங்கள் மறைந்து
மனங்கள் இணைந்து
மரங்கள் வளர்ந்து
மாற்றங்கள் உருவாக்கிடும்
மழையும் பொழிந்திடும்.....
பணமின்றி கல்வி பயின்றிடின்
பாரதியும் பிறந்திடுவான்
படித்த காமராசர்களை பாடிட
பெரிகிடும் மேன்மை....
மதுவின்றி பூமி சுழன்றிடின்
கயவர்கள் கண்டு அஞ்சிய
மாதரும் சுதந்திரம் பெறுவார்
நகையுடன் வீதிகளில் நடமாடிட
பல மாங்கலியமும் நிலைத்திடும்.....
விலையின்றி மருத்துவம் இருந்திடின்
வளர்ந்திடும் சேவையும் பாசமும்
வாழ்ந்திடும் மனித ஆரோக்கியமும்
ஏழ்மையும் எட்டிடும் அதி நவீன மருத்துவத்தை....
ஊழலின்றி அரசியல் நிகழ்ந்திடின்
ஏழ்மை சொல்லும் மறைந்திடும்
பசுமை நிறைந்திடும்
அகிலமும் அன்பில் மலர்ந்திடும்
பாரதமும் வாழ்த்தும்
அகன்ற கைகளை கொண்டு
இவையின்றி உலகம் தொடர்ந்திடின்
பூக்களமும்!!!! போர்களமே!!!!
-மூ.முத்துச்செல்வி