ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
காளை வரும் துள்ளிக்கிட்டு
தில் இருந்தா மல்லுக்கட்டு
இல்லேனா ஓரம் கட்டு...
வீரம் விளைஞ்ச தமிழ் குடிடா
பண்பாட்டில் ரொம்ப கேடு புடிடா
பழக்கத்தில் நாங்க பச்ச புள்ள
பகையை எப்பவும் விட்டதில்லை...
தில் இருந்தா மல்லுக்கட்டு
இல்லேனா ஓரம் கட்டு
பறந்து வருது காளை
பாயும் புலிய போல
நெருங்கி தொட்டுப்பாரு
அங்கே நடுநடுங்குது ஊரு ....
தில் இருந்தா மல்லுக்கட்டு
இல்லேனா ஓரம் கட்டு
திறக்குது அங்கே வாடிவாசல்
பறக்குது எங்கும் புழுதி பூசல்
கூடுது எங்கும் இளைஞர் கடல்
கிழியப்போகுது எதிரியின் குடல்....
தில் இருந்தா மல்லுக்கட்டு
இல்லேனா ஓரம் கட்டு
விளைஞ்ச திமிரு எங்கேயுமே
குலஞ்சு போனதில்லை
அழிஞ்சு போகும் தமிழ் என்றால்
எதிரி இருந்ததில்லை ...
தில் இருந்தா மல்லுக்கட்டு
இல்லேனா ஓரம் கட்டு
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
காளை வரும் துள்ளிக்கிட்டு
தில் இருந்தா மல்லுக்கட்டு
இல்லேனா ஓரம் கட்டு...