ஜல்லிக்கட்டு
உனை குழந்தையாய் கண்டெடுத்து
பிள்ளையென நான் வளர்த்து
தெய்வமாய் உனை வணங்கி திருவிழா
எடுக்கையிலே
எங்கிருந்தோ வந்தார் சிலர்
அவர்கள் பின்னால் இருப்பவர் பலர்
உன்னை நாங்கள் அடித்தோமாம்
துன்புறுத்தி பார்த்தோமாம் என்று
திருவிழாவை தடை போட்டு
உனை வெட்டி கூறு போட்டு விற்றனர்
வெளிநாட்டில்
அதிகாரத்தில் இருந்தவர்களோ இருப்பவர்களோ
ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல்
மெத்தனமாய் இருந்து விட்டு
மக்கள் மனதில் புரட்சி என்ற விதை போட்டு
போராட்டம் வெடித்த உடன்
இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டு
நாடகத்தை அரங்கேற்ற நல்ல நேரம்
பார்க்கின்றனர்
திருவிழாவை தடை செய்ததை மனது தாங்கிக் கொள்ளும்
பிள்ளை போல வளர்த்த உன்னை துன்புறுத்தியதாக சொல்வதை
மனது தாங்கிக் கொள்ள முடியவில்லை
இன்னமும் காத்திருக்கிறோம் திருவிழாவை நடத்த
கண்ணீருடன்....!