ஜல்லிக்கட்டு
தன் மன்வனை எண்ணி சரிகைசீலை கட்டும் பெதும்பை,
பேதை பருவ நாள் தொட்டு சீராட்டி வளர்த்து அந்த ஏறு
நாளை ஏறுபோல் நடை நடந்து எக்காளமிட்டு அவள் பெயரை,
கூப்பிட,
ஏறின் திமிழ் பிடித்தடக்கிய வீர தமிழர் கூட்டம். இது தான் ஜல்லிக்கட்டு!
கணிணி எனும் தீராத நோய் பிடித்து குளிர்பான போதையில் தன்மானிழக்க மாட்டான் தங்க தமிழன்!
நெல்லிகாய் மூட்டை என நினைத்து
'கட்டவிழ்தால் நாங்கள் காந்திய தேனீக்கள் என்று சொல்லாமல் சொல்லிவிடுவோம்!
ஈசன் அவன் வாகனத்தை எறுவிட்டு வளர்க்கும் நாங்கள். நேசமுள்ள காளை நன்பர்களே!
இன் உயிர்ஆழம் வரை காயமடைந்தாலும் ஈன தனமாய் காளைகளை காயபடுத்தமாட்டோம்.
சீறி வரும் காளையை சிட்டு குருவி போல் பறந்து திமிழ்பிடித்து தன்வயபடுத்துவதே எங்கள் வீரம். மறத்தமிழனின் நெஞ்சுரம் ,கும்பிடும் தெய்வதிற்கு குழிப்பறி்க்க கள்ள நரிகளில்லை. கட்டிளங்காளைகள்! களங்கமில்லாதவரகள்!