புரிதல்
எது புரிதல்???
எப்பொழுதும் ஒன்றாக இருப்பதால்
மட்டும் தோன்றுவது
என்று நினைத்தால் அது
சரி அல்ல...
நமக்கு பிடித்தவர்கள்
எங்கிருந்தாலும் நாம்
என்ன நினைப்போம்
என்ன செய்வோம்
என்று நம்மை பற்றி
நம்மை விட அதிகமாக
தெரிந்து வைத்திருப்பது
ஒரு புரிதல்..
தந்தைக்கும் மகளுக்கும்
இருப்பது ஓர்விதமான புரிதல்..
காதலர்கள் இடத்தில்
இருப்பது ஒருவிதமான புரிதல்..
நண்பர்கள் இடத்தில்
இருப்பது ஒருவிதமான புரிதல்..
அண்ணன் தங்கைக்கு இடையே
இருப்பது ஓர் புரிதல்..
நெருங்கியவர்கள் நகைப்பை
வைத்து என்னவென்று
கண்டுகொள்வதும் ஒரு புரிதலே..
அவர்களின் கண் அசைவுக்கேற்ப
நடந்து கொள்வதும்
ஒரு புரிதலே..
அவ்வளவு ஏன்?
மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும்
இருக்கும் ஒரு உணர்வும்
புரிதலே...!!!!
இருவருக்கும் இடையே
சண்டை வருவதும்
புரிதலுக்காகவே....
புரிதல் இல்லாமல் எதுவும்
இல்லை...
ஏன், உலகமே இல்லை
என்று கூட சொல்லலாம்..