இனி

துவைக்கப்பட வேண்டியன
துணிகள் அல்ல;
மனங்கள்..மதங்கள்..
அழுக்குகள் அதிகமாய்
இருப்பது இவற்றில்தான்!..

எல்லைமீறிப் போகும்போது
எவனாய் இருந்தால் என்ன?!
உண்மையை உரக்கச்சொல்ல
உயிரே போனாலும் என்ன?!...

நம்மைநாமே திருப்திபடுத்த
நமக்குநாமே சிரித்துகொள்ள
எத்தனை பொய்கள்?
எத்தனை புரட்டுகள்?
அத்தனை பின்னும்
மதம்..மதம்..மதம்!!
மனம்..மனம்..மனம்!!..

மதமாற்றம் தீர்வல்ல;
மனமாற்றம் போதும்!..

அன்பைச் சொல்லாதவன்
ஆண்டவன் என்றாலும்
அழித்தொழி!!!

எளிமை கூறாத
எந்த மதத்தையும்
ஏறிட்டும் பாராதே!...

கொன்று குவித்து
வென்று முடிக்க
வாழ்க்கை போர்க்களமல்ல!!
ஆசீர்வாதம்...அனுபவி!..
அடுத்தவனையும் நீயாய் நினை!..

இருக்கும் ஆலயங்கள் போதும்!..
இனியாவது வணங்கத்
தொடங்கு!!...

வீடுகள் பெருகியும்
வீதியில் மனிதர்கள்!..
விடை தேடு....

வேதங்கள் ஓது!
புரியாதன விலக்கு!..
புரிபவை செயல்புரி!..

கேள்விகள் கேள்..
பதிலை எதிர்பாராதே!...

மூச்சுள்ள வரை
ஆறுதல் கொள்...
மும்முரமாய் முயற்சிசெய்!!..
மனிதநேயம் வளர்!

கண்ணீர் துடை!
அடுத்தவன் கண்ணீரும்தான்!...

இறுதி மூச்சு
எப்போதென்று
தற்கொலை செய்பவன்
தானுமறியான்!..

நன்றிசொல்...
இருக்கும் அனைத்திற்கும்,
நன்றிசொல்..
இல்லாத அனைத்திற்கும்!..

நீ வாழ்ந்ததாய் எண்ணிக்கொள்ள
இது போதும்!..

அ.மு.நௌபல்@ அபி
29/12/2016

எழுதியவர் : அ.மு.நௌபல் எ அபி (6-Feb-17, 7:49 am)
பார்வை : 89

மேலே